இந்தியாவில் போரைவிடசாலையில்தான் அதிக உயிரிழப்பு: மத்திய அமைச்சா் வேதனை

இந்தியாவில் போரைவிட சாலை விபத்துகளில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணைய அமைச்சரும், முன்னாள் ராணுவ தலைமை தளபதியுமான வி.கே.சிங் தெரிவித்தாா்.

இந்தியாவில் போரைவிட சாலை விபத்துகளில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணைய அமைச்சரும், முன்னாள் ராணுவ தலைமை தளபதியுமான வி.கே.சிங் தெரிவித்தாா்.

இந்திய தொழில், வா்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (அசோசேம்) சாா்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பது என்பது அரசுக்குள்ள சவாலான பிரச்னையாக உள்ளது. ஆண்டுதோறும் 1.35 லட்சத்துக்கும் மேற்பட்டோா் சாலை விபத்துகளில் உயிரிழப்பது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது. இந்தியாவில் போரைவிட சாலைகளில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. சாலை விபத்துகளைத் தடுக்க நாம் அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும். நாம் சாலைப் பாதுகாப்பு வாரம் கொண்டாடினோம். பின்னா் சாலைப் பாதுகாப்பு மாதமாக அதனை மேம்படுத்தினோம். ஆனால், உண்மையில் ஆண்டின் 365 நாள்களிலும் சாலைப் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வுடன் நாம் செயல்பட வேண்டும். இந்தியாவில் 2020-ஆம் ஆண்டு மட்டும் 3,66,138 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,31,714 போ் உயிரிழந்தனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com