ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு: 3 அரசு அதிகாரிகள் பணிநீக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த மூன்று அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளது அந்நாட்டு அரசு. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த மூன்று அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளது அந்நாட்டு அரசு. 

அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: 

காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் அல்தாப் ஹுசைன் பண்டிட், பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர்  முஹம்மது மக்பூல் ஹஜாம், காவலர்  குலாம் ரசூல் பயங்கரவாத தொடர்பில் இருந்த மூவரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

பண்டிட் ஜமாத்-இ-இஸ்லாமுடன் தீவிரமாக தொடர்புடையவர் என்றும் பயங்கரவாதப் பயிற்சிக்காக பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார் என்றும் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.

முஹம்மது மக்பூல் ஹஜாம், 2015ஆம் ஆண்டில், அவர் காஷ்மீர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினரானார். மாணவர்களிடையே பிரிவினைவாதத்தை பிரசாரம் செய்ய இந்த பதவியைப் பயன்படுத்தினார். மேலும் அவர் மாணவர்களை பயங்கரவாத அணிகளில் சேர தூண்டியுள்ளார். அரசு ஆசிரியராக இருப்பினும், அவர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார். 

இதையடுத்து, குலாம் ரசூல் பயங்கரவாதிகளின் ஆதரவாளராக பணியாற்றி வந்தார். அவர் பயங்கரவாதிகளுக்கு தகவல் அளித்து வந்தார். 

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 311 (2) (c) இன் கீழ் இதுபோன்ற வழக்குகளை ஆய்வு செய்து பயங்கரவாத தொடர்பு கொண்ட மூன்று அதிகாரிகளையும் அரசு பணியிலிருந்து நீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com