கேதார்நாத் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஐடிபீபி போலீசார் குவிப்பு

புது டெல்லி: உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்ததால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஐடிபீபி போலீசார் குவிப்பு. 
கேதார்நாத் கோவில்
கேதார்நாத் கோவில்

புது டெல்லி: உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்ததால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த ஐடிபீபி போலீசார் குவிப்பு. 

கரோனா கட்டுப்பாடு காரணங்களால் 2 வருடத்திற்கு பிறகு கோவில் நடை திறக்கப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தரிசனம் தொடங்கியது முதல் இதுவரை 28 சுற்றுலா பயணிகள் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளனர்.

"கேதார்நாத் கோவில் நடைத்திறப்பு மே 6 முதல்  தொடங்கப்பட்டது. இதுவரை 1,30,000 பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர் " என்று  ஐடிபீபி (இந்திய - திபெத் எல்லைக் காவல்படை)யின் மக்கள் தொடர்பு அதிகாரி விவேக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த இந்திய - திபெத் எல்லைக் காவல்படையினர் மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com