மகாராஷ்டிரத்தில் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம்: தலைமையாசிரியர் உள்பட மூவர் கைது

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் தனியார் உதவி பெறும் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் வாங்கிய தலைமையாசிரியர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பிவாண்டியில் உள்ள தனியார் உதவி பெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு சேர்க்கை வழங்குவதற்காக பள்ளி தலைமையாசிரியர் உள்பட மூவரும் ரூ.3,500 கேட்டுள்ளனர். இதற்கான ரசீது 3 மாதங்கள் கழித்துக் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். 

இதையடுத்து, சரியான ரசீது இல்லாததால் பெற்றோர்கள் அங்குள்ள காவல்நிலையில் புகார் செய்தனர். இதன் விளைவாக பள்ளியின் பள்ளியின் தொடக்கக்கல்வி தலைமை ஆசிரியர் தீபக் லெலே (55), பள்ளியின் இடைநிலைக் கல்விப் பிரிவின் தலைமை ஆசிரியர் ஆத்மாராம் வாக் (57) மற்றும் ஆசிரியர் சுரேஷ் குல்கர்னி (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ளூர் காவல் நிலையத்தில் மூவர் மீதும் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் கூறினர். 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com