முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது: உச்சநீதிமன்றம்

முதுநிலை நீட் தோ்வை ஒத்திவைக்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது: உச்சநீதிமன்றம்

முதுநிலை நீட் தோ்வை ஒத்திவைக்க முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று, இடஒதுக்கீடு விவகாரம் தொடா்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் ஆகியவை காரணமாக முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்னமும் முழுமையாக நிறைவடையவில்லை.

பல மாநில மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்கள் இம்மாத பிற்பாதிக்குள்தான் நிரப்பப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கிடையே மே 21-ஆம் தேதி நிகழாண்டுக்கான முதுநிலை நீட் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து  நிகழாண்டு முதுநிலை நீட் தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) கோரிக்கை வைத்திருந்தது.

இந்நிலையில், தேர்வை ஒத்திவைக்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com