மே 27-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை :இந்திய வானிலை ஆய்வு மையம்

கேரளம் வருகிற மே 27 முதல் தென்மேற்கு பருவ மழையைப் பெற உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கேரளம் வருகிற மே 27 முதல் தென்மேற்கு பருவ மழையைப் பெற உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக கேரளம் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தின் முதல் தேதியில் தென்மேற்கு பருவமழையைப் பெறும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளது. தென்மேற்கு பருவமழை இந்தியாவின் விவசாயத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் காரணத்தினாலேயே தென்மேற்குப் பருவமழை இந்தியாவின் நிதியமைச்சர் என்று அழைக்கப்படுகிறது. 

இது குறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கூறியது, “ இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக மே 27 முதல் தொடங்க உள்ளது. பருவமழை குறிப்பிட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னரோ அல்லது 4 நாட்கள் பின்னரோ தொடங்கும். இதனை கூடுதல் அல்லது குறைதல் பிழை ( error of plus or minus) எனப்படும். 

இந்தியாவில் பருவமழை பெறும் பகுதிகளை பொறுத்தவரை தெற்கு அந்தமான் தீவுகள் முதலில் பருவமழையைப் பெற்று வருகின்றன.அதன் பின் இந்த பருவமழையானது வங்களா விரிகுடாவின் குறுக்காக தென்மேற்கு திசையை நோக்கி நகரும். வழக்கமாக தென்மேற்கு பருவமழை அந்தமான் தீவுகளின் மீது மே 22 ஆம் தேதி நகரும்.

நிலநடுக்கோட்டுக்கு குறுக்கே வீசும் காற்றானது தென்மேற்குப் பருவமழையை தெற்கு அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் வங்காள விரிகுடாவின் சில பகுதிகளின் மீது வருகிற மே 15 ஆம் தேதியில் வீசி மழைப்பொழிவை ஏற்படுத்த சாதகமான சூழலை உருவாக்கும்” என்றது.

கடந்த கால தரவுகளின் படி அந்தமான் பகுதியின் மீது தென்மேற்கு பருவக் காற்று வீசுவதற்கும், கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதிக்கும் மற்றும்  இந்தியா தென்மேற்கு பருவமழையால் பெரும் மழையின் அளவுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com