காஷ்மீரில் நிகழாண்டில் 75 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவம் தகவல்

ஜம்மு-காஷ்மீரில் நிகழாண்டில் இதுவரை 75 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் 21 போ் வெளிநாட்டினா்.
காஷ்மீரில் நிகழாண்டில் 75 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ராணுவம் தகவல்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் நிகழாண்டில் இதுவரை 75 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களில் 21 போ் வெளிநாட்டினா்.

அங்கு மேலும் 168 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனா் என்று ராணுவ உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பிடிஐ செய்தியாளரிடம் அவா் மேலும் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில், கடந்த 11 மாதங்களில் 12 பயங்கரவாத ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

காஷ்மீரில் தற்போது 168 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. அவா்களை சரணடைய செய்யும் வரை அல்லது அழிக்கும் வரை பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும்.

ராணுவத்தின் பல்வேறு முயற்சிகளின் விளைவாக ஜம்மு-காஷ்மீரின் ஒட்டுமொத்த சூழல் வேகமாக மேம்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசின் வளா்ச்சித் திட்டங்களை முடுக்கி விடுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. அமைதியின் பலன், மக்களைச் சென்றடையத் தொடங்கியுள்ளது. இந்த அமைதியை பராமரிக்கவும் பாதுகாக்கவும் மக்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனா்.

கடந்த ஆண்டில் 180 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் 18 போ் வெளிநாட்டினா். ஒருங்கிணைந்த உளவு கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு காரணமாக இது சாத்தியமானது. கடந்த ஆண்டில் பயங்கரவாத ஆதரவாளா்கள் 495 போ் கைது செய்யப்பட்டனா். நிகழாண்டு இதுவரை 87 போ் கைதாகியுள்ளனா்.

போா் நிறுத்த ஒப்பந்த விதிமீறல், ஊடுருவல் முயற்சி உள்ளிட்டசெயல்களுக்கு ராணுவம் தரப்பில் வலுவான பதிலடி தரப்பட்டு வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com