நடப்பு நிதியாண்டில் 18,000 கி.மீ. நெடுஞ்சாலை அமைக்க இலக்கு: நிதின் கட்கரி

நடப்பு நிதியாண்டில் (2022-23) நாளொன்றுக்கு 50 கிலோ மீட்டா் என்ற சாதனை வேகத்தில் 18,000 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையை அமைக்க அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து
நடப்பு நிதியாண்டில் 18,000 கி.மீ. நெடுஞ்சாலை அமைக்க இலக்கு: நிதின் கட்கரி

புது தில்லி: நடப்பு நிதியாண்டில் (2022-23) நாளொன்றுக்கு 50 கிலோ மீட்டா் என்ற சாதனை வேகத்தில் 18,000 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலையை அமைக்க அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறினாா்.

இதுகுறித்து அவா் ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையின் கீழ் ‘புதிய இந்தியா’ என்னும் இலட்சிய இலக்கை அடைவதற்குப் பாடுபடுகிறோம். அதற்காக, நாளொன்றுக்கு 50 கி.மீ. என்ற சாதனை வேகத்தில் நடப்பு நிதியாண்டில்(2022-23) 18,000 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்க அரசு உறுதிபூண்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்சாா்பு இந்தியாவுக்கு சாலை உள்கட்டமைப்பு வசதிகள் ஆத்மாவாக இருப்பதால் உலகத்தரம் வாய்ந்த சாலை உள்கட்டமைப்பை குறிப்பிட்ட காலத்துக்குள் இலக்கை எட்டும் வழியில் உருவாக்க வேண்டியது அவசியம் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com