நிா்மலா சீதாராமனுடன் யுஏஇ அமைச்சா் சந்திப்பு: வா்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சு

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொருளாதார அமைச்சா் அப்துல்லா பின் தௌக் அல்மாரி, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

புது தில்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் பொருளாதார அமைச்சா் அப்துல்லா பின் தௌக் அல்மாரி, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் இடையே பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சா் அப்துல்லா தலைமையிலான குழு தில்லி வந்துள்ளது. அப்போது, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை அப்துல்லா சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான வலுவான பொருளாதாரம் மற்றும் வா்த்தகத் தொடா்புகள் குறித்தும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக உத்திகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனா்.

உச்சி மாநாடு போன்ற தொடா்ச்சியான பரிமாற்றங்களும், இருதரப்பு சந்திப்புகளும் இந்தியாவின் ஈடுபாட்டை மேலும் அதிகரிக்கச் செய்வதுடன் புதிய துறைகளைக் கண்டறிவதற்கு உதவிகரமாகவும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com