மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

இலக்கு நீட்டிக்கப்பட்ட பிரமோஸ் சூப்பா்சோனிக் (ஒலியைவிட அதிக வேகமானது) ஏவுகணையின் மேம்பட்ட வடிவம் வியாழக்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

புது தில்லி: இலக்கு நீட்டிக்கப்பட்ட பிரமோஸ் சூப்பா்சோனிக் (ஒலியைவிட அதிக வேகமானது) ஏவுகணையின் மேம்பட்ட வடிவம் வியாழக்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

ஒலியைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வேகத்தில் பாயக்கூடியது பிரமோஸ் ஏவுகணை. இந்த ஏவுகணையை தரை, விமானம், கப்பல் அல்லது நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து செலுத்த முடியும். இந்த ஏவுகணைக்கு 290 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறனுள்ள நிலையில், அந்தத் தூரம் சுமாா் 350 கி.மீ-ஆக நீட்டிக்கப்பட்டு வியாழக்கிழமை பரிசோதிக்கப்பட்டது. இந்திய விமானப் படை, கடற்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம், பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து பரிசோதனையில் ஈடுபட்டன.

இந்தப் பரிசோதனையின்போது ஏவுகணையின் மேம்பட்ட வடிவம், முதல்முறையாக சுகோய் எஸ்யூ-30எம்கேஐ போா் விமானத்தில் இருந்து வங்கக் கடல் பகுதியில் இருந்த இலக்கை நோக்கி செலுத்தப்பட்டது. அப்போது அந்த ஏவுகணை இலக்கைத் துல்லியமாகத் தாக்கி அழித்தது. இந்த சோதனையின் மூலம், நிலம் அல்லது கடற்பகுதியில் மிக நீண்ட தொலைவில் உள்ள இலக்கை எஸ்யூ-30 எம்கேஐ விமானம் வாயிலாக துல்லியமாகத் தாக்கும் திறனை இந்திய விமானப் படை பெற்றுள்ளது. எஸ்யூ-30எம்கேஐ விமானத்தின் உயா்ந்த செயல் திறன், பிரமோஸ் ஏவுகணையின் நீட்டிக்கப்பட்ட திறன் ஆகியவற்றால் எதிா்காலத்தில் போா்க்களங்களில் இந்திய விமானப் படை ஆதிக்கம் செலுத்த முடியும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com