கண்ணிவெடி வெடித்ததில் காயமடைந்த காவலாளி!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் சத்தீஸ்கர் ராணுவ படை காவலாளி ஒருவர் கண்ணிவெடி வெடித்ததில் காயமடைந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் சத்தீஸ்கர் ராணுவ படை காவலாளி ஒருவர் கண்ணிவெடி வெடித்ததில் காயமடைந்துள்ளார்.

இந்த கண்ணிவெடி தாக்குதலில் நக்சலைட்டுகளுக்கு தொடர்பிருப்பதாக காவல்துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை ஐஜி சுந்தர்ராஜ் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ” இந்த விபத்து காலை 11 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சத்தீஸ்கர் ராணுவ படைப்பிரிவின் 8-வது குழுவினர் பாண்டேமுர்கா கிராமத்தில் நெலஸ்னர் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் நெலஸ்னர் பகுதியில் ஒரு ஆபரேசனுக்காக சுற்றிவளைத்தனர். அப்போது காவலாளி ராம்நாத் மௌரியா மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியை மிதித்ததால் கண்ணிவெடி வெடித்தது. இந்த விபத்தில் காவலாளி ராம்நாத் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக நெலஸ்னரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின் அவர் தண்டிவாடா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும், விபத்து நிகழ்ந்த இடத்தில் வேறு ஏதேனும் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதா என்று பணி நடைபெறுகிறது” என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com