வார இறுதியில் வெயில் வாட்டி வதைக்குமாம்: வெப்ப அலை எச்சரிக்கை

அதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தில்லியில் மீண்டும் வெப்ப அலை வீசும் என  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வார இறுதியில் வெயில் வாட்டி வதைக்குமாம்: வெப்ப அலை எச்சரிக்கை
வார இறுதியில் வெயில் வாட்டி வதைக்குமாம்: வெப்ப அலை எச்சரிக்கை


தலைநகா் தில்லியில் வார இறுதி நாள்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தில்லியில் மீண்டும் வெப்ப அலை வீசும் என  வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தில்லியில் வெப்ப நிலையானது 40 - 46 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 14 மற்றும் 15ஆம் தேதிகளில் பஞ்சாப், ஹரியாணா தில்லி பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களின் பல பகுதிகளுக்கு சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் லேசான மழை பெய்ததால் வெப்பம் சற்று தணிந்திருந்த நிலையில், கடந்த இரு தினங்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகலில் வெயிலின் அதிகமாக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com