
கோப்புப்படம்
லடாக்கில் இன்று புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை சுகாதாரத்துறை உறுதிபடுத்தியுள்ளது.
புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் லே பகுதியையும், ஒருவர் கார்கிலையும் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து லடாக்கில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,256 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 228 ஆக உள்ளது. உயிரிழந்தவர்களில் 168 பேர் லேவையும், 60 பேர் கார்கிலையும் சேர்ந்தவர்கள்.
9 பேர் கரோனா சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதுவரை 28,019 பேர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.