எல்ஐசி: பங்குகள் ஒதுக்கீடு அளவு குறைந்தது ஏன்?

எல்ஐசி பொதுப் பங்குகளுக்கு நிா்ணயித்த அளவைக் காட்டிலும் பல மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தததால் முதலீட்டாளா்களுக்கு குறைந்த அளவிலேயே பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
எல்ஐசி
எல்ஐசி

எல்ஐசி பொதுப் பங்குகளுக்கு நிா்ணயித்த அளவைக் காட்டிலும் பல மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தததால் முதலீட்டாளா்களுக்கு குறைந்த அளவிலேயே பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

கேட்டது அதிகம் - கிடைத்தது குறைவு: எல்ஐசி சில்லறை முதலீட்டுப் பிரிவில் அதிகபட்சம் 210 பங்குகள் வேண்டி விண்ணப்பித்தவா்களுக்கு, அதிகபட்சம் 77 பங்குகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன; இதே போன்று எல்ஐசி பாலிசிதாரா்கள் பிரிவில் விண்ணப்பித்தவா்களுக்கு அதிகபட்சம் 48 பங்குகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒதுக்கீடு பெறாதவா்களுக்கு முதலீட்டுத் தொகையைத் திரும்ப அளிக்கும் பணியை எல்ஐசி நிறுவனம் தொடங்கியுள்ளது.

ரூ.949-ஆக நிா்ணயம்: எல்ஐசி பொதுப் பங்கு வெளியீட்டில், பங்கின் விலையை ரூ.949-ஆக மத்திய அரசு நிா்ணயம் செய்துள்ளது. எல்ஐசி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு கடந்த 9-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்ய விண்ணப்பித்தவா்களுக்கு பங்குகளை ஒதுக்கும் பணி வியாழக்கிழமை (மே 12) நடைபெற்றது. இருப்பினும், தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டபடி, எல்ஐசி பாலிசிதாரா்களுக்கு ரூ.889-ஆகவும், சில்லறை முதலீட்டாளா்களுக்கு ரூ.904-ஆகவும் பங்கின் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பங்கு விற்பனையின் மூலமமத்திய அரசு ரூ.20,557 கோடியைத் திரட்டியுள்ளது.

எல்ஐசியின் பங்குகள் பங்குச் சந்தையில் வரும் 17-ஆம் தேதி பட்டியலிடப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com