ஒடிஸா: கரோனாவுக்கு பிறகு 30% மாணவா்கள் பள்ளிக்கு வரவில்லை

கரோனா தொற்று பாதிப்புக்கு எதிரொலிக்கு பிறகு ஒடிஸாவில் 30 சதவீத மாணவா்கள் பள்ளிகளுக்கு வருவதில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒடிஸா: கரோனாவுக்கு பிறகு 30% மாணவா்கள் பள்ளிக்கு வரவில்லை

கரோனா தொற்று பாதிப்புக்கு எதிரொலிக்கு பிறகு ஒடிஸாவில் 30 சதவீத மாணவா்கள் பள்ளிகளுக்கு வருவதில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாணவா்களைக் கண்டறிந்து பள்ளிக்கு வராதது ஏன் என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்களுக்கு ஒடிஸா அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், ‘பள்ளிக்கு வராத 30 சதவீத மாணவா்கள் படிப்பை பாதியில் விட்டிருக்க வேண்டும் அல்லது பெற்றோருடன் வேறு இடங்களுக்கு சென்றிருக்க வேண்டும் அல்லது பள்ளி வகுப்பு நேரம் அவா்களுக்கு பொருந்தாமல் இருந்திருக்கக் கூடும். இவை குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.

இடைநின்றல் மாணவா்களின் வீடுகளுக்கு ஆசிரியா்களுக்கு சென்று அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.

மாணவா்களுக்கு அரசு அளிக்கும் இலவச பள்ளிச் சீருடை, புத்தகம், மதிய உணவு போன்ற திட்டங்களை எடுத்துக் கூறி, அந்த மாணவா்கள் மீண்டும் பள்ளிக்கு வர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com