சிபிஎஸ்இ தலைவராக நிதி சிப்பா் நியமனம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி நிதி சிப்பா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி நிதி சிப்பா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மத்திய கனரக நிறுவனங்கள் அமைச்சகத்தின் கூடுதல் செயலராக நிதி சிப்பா் பணியாற்றி வந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ தலைவராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் 1994-ஆம் ஆண்டு சத்தீஸ்கரைச் சோ்ந்த ஐஏஎஸ் அதிகாரியாவாா்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆா்இசி-யின் தலைவா்-மேலாண் இயக்குநராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி விவேக் குமாா் தேவாங்கன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் மணிப்பூரைச் சோ்ந்த 1993 பிரிவு அதிகாரி ஆவாா்.

பிரதமா் அலுவலகத்தில் கூடுதல் செயலராகப் பணியாற்றி வரும் எஸ்.கோபாலகிருஷ்ணன், மத்திய சுகாதார-குடும்பநலத் துறையின் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். நீதி ஆயோக் கூடுதல் செயலரான ராகேஷ் சா்வால், தேசிய வக்ஃபு வளா்ச்சி கழகத்தின் மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மத்திய பெண்கள்-குழந்தைகள் நல அமைச்சகத்தில் இணை செயலராகப் பணியாற்றி வரும் அதிதி தாஸ் ரௌத், மத்திய நிலக்கரித் துறையின் இணை செயலா் சியாம் பகத் நெகி, மத்திய நிதித்துறையின் இணை செயலா் மணீஷா சின்ஹா ஆகியோருக்கு அந்தந்த துறைகளில் கூடுதல் செயலராகப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலராக குமாா் அனுக்ரே சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளாா். 1992-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அவா், தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றி வருகிறாா்.

மேலும் பல்வேறு துறைகளுக்குக் கூடுதல் செயலா்களையும் இணை செயலா்களையும் மத்திய பணியாளா் அமைச்சகம் நியமித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com