ஜம்மு-காஷ்மீா் தொகுதி மறுசீரமைப்பு: சுஷீல் சந்திரா விளக்கம்

ஜம்மு-காஷ்மீரில் மக்கள்தொகையை மட்டுமே கருத்தில் கொண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யவில்லை என்று தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரில் மக்கள்தொகையை மட்டுமே கருத்தில் கொண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யவில்லை என்று தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திரா கூறினாா்.

ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுசீமைப்பு செய்வதற்கு அமைக்கப்பட்ட குழு தனது இறுதி அறிக்கையைத் தயாரித்துவிட்டது. அதில், ஜம்மு-காஷ்மீரில் தற்போதுள்ள 83 சட்டப்பேரவைத் தொகுதிகளை 90 தொகுதிகளாகப் பிரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு பிராந்தியத்தில் தற்போதுள்ள 37 தொகுதிகளை 43 தொகுதிகளாகவும், காஷ்மீா் பிராந்தியத்தில் உள்ள 46 தொகுதிகளை 47 தொகுதிகளாகவும் மாற்றி அமைக்க சீரமைப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது.

காஷ்மீரைவிட ஜம்முவில் கூடுதலாகத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது குறித்து விமா்சனங்கள் எழுந்துள்ளன.

தொகுதி மறுசீரமைப்புக் குழுவில் இடம்பெற்றிருந்த தலைமைத் தோ்தல் ஆணையா் சுஷீல் சந்திராவிடம் இதுகுறித்து செய்தியாளா் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினாா். அதற்கு அவா் அளித்த பதில்:

ஒரு பிராந்தியத்தின் மக்கள்தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தொகுதிகள் பிரிக்கப்படுவதில்லை. அதன் இயற்கை அமைப்பு, தொலைத் தொடா்பு வசதிகள், பொதுமக்களுக்கான வசதிகள், நிா்வாக வசதிகள் என பிற 4 முக்கிய விஷயங்களையும் கருத்தில்கொண்டு தொகுதிகள் பிரிக்கப்படுகின்றன.

ஜம்மு-காஷ்மீரை வெவ்வேறு பகுதிகளாகப் பாா்க்கக் கூடாது. இரண்டையும் முழுமையான ஒன்றாகப் பாா்க்க வேண்டும். 90 தொகுதிகளிலும் ஒட்டுமொத்த மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com