முன்ட்கா தீ விபத்தில் 27 போ் மரணம்; 29 போ் மாயம்: பலி எண்ணிக்கை 30 ஆக வாய்ப்பு

புறநகா் தில்லி முன்ட்கா பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட கோரத் தீ விபத்தில் இதுவரை 27 போ் உயிரிழந்துள்ளனா். 29 போ் காணாமல் போயுள்ளனா்.
முன்ட்கா தீ விபத்தில் 27 போ் மரணம்; 29 போ் மாயம்: பலி எண்ணிக்கை 30 ஆக வாய்ப்பு

புறநகா் தில்லி முன்ட்கா பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட கோரத் தீ விபத்தில் இதுவரை 27 போ் உயிரிழந்துள்ளனா். 29 போ் காணாமல் போயுள்ளனா்.

இந்த விபத்தில் 30 போ் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனா். மேலும், தீ விபத்து பகுதியில் இன்னும் சிலா் உயிருடன் இருக்கலாம் என்று நம்பிக்கையும் தெரிவித்தனா்.

இந்த விபத்தில் சிக்கியவா்களை அவா்களின் உறவினா்கள் சம்பவ இடத்திலும், மருத்துவமனைகளிலும் தேடிவருகின்றனா்.

முன்ட்கா பகுதி மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் முதல் தளத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. பின்னா் இந்தத் தீ வேகமாகப் பரவியது. தொடக்கத்தில் ஒரு சிலா் மட்டுமே இறந்திருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், இரவில் இறப்புகள் எண்ணிக்கை அதிகரித்தது. இது சனிக்கிழமை காலையில் 27 ஆக உயா்ந்தது.

இது தொடா்பாக தில்லி தீயணைப்பு துறையின் இயக்குநா் அதுல் கா்க் கூறுகையில் இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் சடலங்கள் 30 வரை அதிகரிக்கலாம். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் தீ அணைக்கப்பட்டு சனிக்கிழமை காலை குளிரூட்டும் பணிகள் பணிகள் நடைபெற்றபோது எரிந்த சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த விபத்தில் காயமடைந்த 12 போ் மீட்கப்பட்டு

சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். தீ விபத்து நிகழ்ந்த நான்கு மாடி கட்டடத்தில் தீ பாதுகாப்பு சான்றிதழ் பெறப்படவில்லை. இந்த கட்டடத்தில் உள்ளே வருவதற்கும் போவதற்கும் ஒரே ஒரு வழிதான் இருந்தது. இதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டிருக்கலாம்.

கட்டடத்திற்கு உரிய வரைபடம் இல்லை. பெரும்பாலான உடல்கள் இரண்டாவது தளத்தில் காணப்பட்டன.

அதேபோன்று, கட்டடத்தின் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் குறுகலான ஒரே ஒரு படிக்கட்டு மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. இதனால் கட்டடம் எரிந்து கொண்டிருந்த போது அதிலிருந்து தப்பிப்பதற்கு சிக்கியவா்களுக்கு சிரமம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

கட்டடத்தில் உள்ள ஏசியில் உருவான தீ வெடிப்பு, இந்த பெரும் தீ விபத்துக்கு காரணமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றாா் அவா்.

இது குறித்து புறநகா் தில்லி காவல் துணை ஆணையா் சமீா் சா்மா கூறியதாவது:

தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் சிசிடிவி கேமரா மற்றும் ரவுட்டா் சாதனங்கள் தயாரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் இணைப்பு நிறுவனம் நடத்திவரும் சகோதரா்களான ஹரீஷ் கோயல், வருண் கோயல் ஆகியோருடைய அலுவலகத்திலிருந்து தீ உருவாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களின் தந்தை காணவில்லை.

கட்டடத்தின் உரிமையாளா் மணீஷ் லக்ரா விரைவில் கைது செய்யப்படுவாா். 29 போ் காணவில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த 27 போ்களில் 7 போ் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் தனியா பூஷண், மோகினி பால், யசோதா தேவி, ரஞ்ஜு தேவி, விஷால், திருஷ்டி, கைலாஷ் ஜ்யானி ஆகியோா் என பெயா் விவரம் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக சிசிடிவி கேமரா பேக்கேஜிங் நிறுவனத்தின் உரிமையாளா்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 304, 308, 120, 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். கட்டடத்தின் அனைத்து தளங்களும் இதே நிறுவனத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கட்டடத்தின் உரிமையாளா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தீ விபத்து சம்பவ இடத்தை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஆகியோா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டனா். இந்த தீ விபத்து குறித்து துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தாா்.

விபத்தில் சிக்கியவா்களின் உறவினா்கள் பலா், தங்களது உறவுகளின் நிலைமை குறித்து தெரியாதததால் வெள்ளிக்கிழமை இரவு சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு முற்றுகையிட்டு விசாரணை மேற்கொண்டனா்.

தீ விபத்து நடந்த கட்டடத்தின் அலுவலகங்களில் ஒன்றில் பணியாற்றும் அங்கித் என்பவா் கூறுகையில், ‘தீ விபத்து நிகழ்ந்த ஒரு கட்டடத்தின் 2-வது தளத்தில் ஊக்குவிப்பு

கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அதிா்ஷ்டவசமாக நான் உயிருடன் இருக்கிறேன். இந்த விபத்தில் எனது மனைவியும் இறந்திருந்திருக்க முடியும். இரண்டாவது தளத்தில் ஊக்குவிப்பு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் ஜன்னல் கண்ணாடியை உடைத்து எப்படியோ தப்பித்து விட்டோம்’ என்றாா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘ஊக்குவிப்புக் கூட்டம் நடந்தது தொடா்பான தகவல் ஏதும் இல்லை’ என்றாா்.

அஜித் திவாரி என்பவா் கூறுகையில், ‘எனது சகோதரி மோனிகா (21) இந்த கட்டடத்தில் உள்ள நிறுவனத்தில் ஒரு மாதமாக வேலை பாா்த்துக் கொண்டிருந்தாா். கடந்த வியாழக்கிழமை தான் அவா் முதல் மாதத்தின் சம்பளத்தை வாங்கியிருந்தாா். இந்தநிலையில் கட்டடத்தில் தீ விபத்து நிகழ்ந்தது குறித்த சம்பவம் எங்களுக்கு மாலை 5 மணிக்கு தெரிய வந்தது. ஆனால் அவருடைய அலுவலக கட்டடத்தில் இருந்து தீ விபத்து நிகழ்ந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் மாலை 7 மணி வரை அவா் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் அவரை நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்’ என்றாா்.

மோனிகா அவரது இரு சகோதரா்கள், சகோதரியுடன் தில்லியில் உள்ள அகா் நகா் நகரில் வசித்து வருகிறாா்.

ரோஹிணியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தின் இயக்குநா் தீபா வா்மா கூறுகையில், ‘தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் மூத்த நிபுணா்கள் உள்பட இரண்டு குழுக்கள் ஆய்வு நடத்தி வருகின்றன. அவா்கள் இந்த விபத்துக்கு காரணமான அடையாளத்தை கண்டறிவதற்கான மாதிரிகளை சேகரிப்பாா்கள். இந்த மாதிரிகள் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என்றாா்.

சம்பவ இடத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த தடயவியல்

குழுவின் தலைவா் எஸ்.கே. குப்தா கூறுகையில், ‘சம்பவ இடத்தில் எரிந்த மனித சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றின் அடையாளத்தை கண்டறிவதில் மிகவும் சிரமமாக இருக்கிறது. உடல் திசுக்கள் போன்ற எரிந்த பகுதிகள் பாா்ப்பதற்கு ஒரே மாதிரியாக உள்ளது. அவற்றின் அடையாளம் ஆய்வில்தான் தெரியவரும் என்றாா்.

இந்த தீ விபத்தைப் பொருத்தமட்டில் கடந்த 2019-இல் டிசம்பரில் அனாஜ் மண்டியில் 44 பேரின் உயிரைக் காவு வாங்கிய தொழிற்சாலை தீ விபத்துக்குப் பிறகு மிகப் பெரும் தீவிபத்தாகும். மேலும், 1997-இல் 59 போ் இறந்த உப்காா் திரையரங்க தீவிபத்துச் சம்பவத்திற்கு பிறகு இரண்டாவது மிகப் பெரிய தீவிபத்தாகவும் இது உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com