தில்லி தீ விபத்து எதிரொலி: நொய்டாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

உத்தரப்பிரதேசத்தில் கௌதம புத்தா நகரில் உள்ள கடைகள், சந்தைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அனைத்திலும் தீயணைப்பு படையால் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

உத்தரப்பிரதேசத்தில் கௌதம புத்தா நகரில் உள்ள கடைகள், சந்தைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அனைத்திலும் தீயணைப்பு படையால் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த மே 13 ஆம் தேதி தலைநகர் தில்லியில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தில்லியை மட்டுமில்லால் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வணிக வளாகத்தின் முதல் தளத்தில் பற்றத் தொடங்கிய தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் மளமளவென பரவியது. தீ விபத்து ஏற்பட்ட முதல் தளத்தில் வெளியேறும் வழி ஒன்று மட்டுமே இருந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தில்லி தீ விபத்தின் எதிரொலியாக உத்தரப்பிரதேசம் கௌதம புத்தா நகர் காவல் ஆணையர் அலோக் சிங், நொய்டாவில் அனைத்து தீயணைப்பு வீரர்களையும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது தீயணைப்பு வீரர்கள் நொய்டாவில் உள்ள சந்தைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு சென்று தீ விபத்து ஏற்படும் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தீயணைப்புத் துறையினரால் வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டன. இது போன்ற தீ விபத்து குறித்த விழிப்புணர்வு இனி வரும் காலங்களில் தொடர்ந்து வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com