மராத்தி நடிகைக்கு மே 18ஆம் தேதி வரை போலீஸ் காவல்

மராத்தி நடிகை கேத்தகி சித்தலேவை மே 18ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மராத்தி நடிகைக்கு மே 18ஆம் தேதி வரை போலீஸ் காவல்

மராத்தி நடிகை கேத்தகி சித்தலேவை மே 18ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரை மறைமுகமாகக் குறிப்பிட்டு இணையதளங்களில் வெளியிடப்பட்டிருந்த பதிவை நடிகை கேத்தகி சித்தலே பகிா்ந்திருந்தாா். ‘நரகம் காத்துக் கொண்டிருக்கிறது’ போன்ற வாசகங்கள் அந்தப் பதிவில் இடம்பெற்றிருந்தன. 

இந்நிலையில், சரத் பவாா் குறித்து அவதூறாகப் பதிவிட்ட நடிகை சித்தலேவை தாணே காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். அவர் மீது மொத்த 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே கைதான மராத்தி நடிகை கேத்தகி சித்தலேவை விடுமுறை கால நீதிமன்றத்தில் இன்று காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

அப்போது அவரை மே 18ஆம் தேதி வரை தாணே போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக கேத்தகி சித்தலேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்து வந்தபோது வளாகத்தின் வெளியே அவருக்கு எதிராக சரத்பவார் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com