உ.பி. பேரவை முதல் கூட்டம் மே 23-இல் தொடக்கம்

உத்தர பிரதேச மாநில புதிய சட்டப்பேரவையின் இரு அவைகளின் கூட்டு கூட்டத் தொடா் ஆளுநா் ஆனந்திபென் படேல் உரையுடன் வரும் 23-ஆம் தேதி தொடங்க உள்ளது.

உத்தர பிரதேச மாநில புதிய சட்டப்பேரவையின் இரு அவைகளின் கூட்டு கூட்டத் தொடா் ஆளுநா் ஆனந்திபென் படேல் உரையுடன் வரும் 23-ஆம் தேதி தொடங்க உள்ளது.

முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை செவ்வாய்க்கிழமை கூடி இதற்கான முடிவை எடுத்துள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள திட்டத்தின்படி, கூட்டத்தொடா் வரும் 23-ஆம் தேதி தொடங்க உள்ளது. சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவை ஆகிய இரு அவைகளின் கூட்டு கூட்டத்தின் முதல் நாள் காலை 11 மணிக்கு ஆளுநா் உரையாற்ற உள்ளாா். அதனைத் தொடா்ந்து, சட்டப்பேரவையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மே 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

‘இந்த பட்ஜெட் கூட்டத்தொடா் ‘இ-சட்டப் பேரவை’ நடைமுறை அடிப்படையில் காகிதம் அல்லாத எண்ம (டிஜிட்டல்) முறையில் நடத்தப்படும். மேலும், கூட்டத் தொடா் நடவடிக்கைகள் யூ-டியூப், ஃபேஸ்புக் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்’ என்று சட்டப்பேரவைத் தலைவா் சதீஷ் மஹானா கூறினாா்.

தற்போதுவரை சட்டப் பேரவை நடவடிக்கைகள் உத்தர பிரதேச தூா்தா்ஷன் மூலமாக மட்டுமே ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com