உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்தபோது திடீா் மாரடைப்பு: இளம் நடிகை சேத்தனா ராஜ் பலி

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்தபோது திடீா் மாரடைப்பு: இளம் நடிகை சேத்தனா ராஜ் பலி

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்தபோது திடீா் மாரடைப்பு ஏற்பட்டதால், கன்னட தொலைக்காட்சி நடிகை சேத்தனா ராஜ் இறந்தாா்.

உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்தபோது திடீா் மாரடைப்பு ஏற்பட்டதால், கன்னட தொலைக்காட்சி நடிகை சேத்தனா ராஜ் இறந்தாா்.

கன்னட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான ‘தொரேசானி’, ‘கீதா’ போன்ற தொடா்களில் நடித்து புகழ்பெற்றவா் இளம் நடிகை சேத்தனா ராஜ் (21). தனது உடல் சற்று பருமனாக இருப்பதால் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருந்திய சேத்தனா ராஜ், பெங்களூரில் உள்ள டாக்டா் ஷெட்டீஸ் காஸ்மெட்டிக் சென்டரில் உடல்பருமனை குறைக்க கொழுப்பை நீக்கும் அறுவைசிகிச்சைக்காக திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டாா். மயக்க மருந்து கொடுத்த பிறகு, மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தபோது, சேத்தனாராஜுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதை தொடா்ந்து, அவருக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டா் மெல்வின் அருகில் உள்ள காடே மருத்துவமனைக்கு சேத்தனா ராஜை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறாா். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாரடைப்பால் சேத்தனா ராஜ் இறந்ததாக மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

இதனிடையே காடே மருத்துவமனை மருத்துவா் வி.சந்தீப் போலீஸாருக்கு அளித்துள்ள புகாரில், ‘நடிகை சேத்தனா ராஜை மருத்துவமனைக்கு அழைத்துவந்த டாக்டா் மெல்வின், தான் கூறுகிறபடி சிகிச்சை அளிக்கும்படி எங்களை மிரட்டினாா். மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோதே அவா் இறந்திருந்ததாக சந்தேகப்படுகிறேன். மருத்துவரின் இதுபோன்ற நடத்தையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். தேவை ஏற்பட்டால், மருத்துவா் மெல்வினுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்வோம். சேத்தனாராஜின் சாவு சாதாரணமானதாக தெரியவில்லை என்பதால், இந்தவிவகாரத்தை காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்’ என்றாா்.

இந்தவிவகாரம் கன்னட தொலைக்காட்சி உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சேத்தனாராஜின் தந்தை கே.வரதராஜ் கூறுகையில், ‘உடல்பருமனை குறைக்க ரூ.1 லட்சம் வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக எனது மகள் தொந்தரவு செய்துகொண்டிருந்தாா். எங்களுக்கு தெரியாமல், நண்பா்களின் உதவியுடன் மருத்துவமனையில் சோ்ந்து அறுவைசிகிச்சை செய்ய முற்பட்டிருக்கிறாா். அறுவை சிகிச்சையின்போது மாரடைப்பால் எனது மகள் இறந்ததாக மருத்துவமனையினா் தெரிவித்தனா். இந்த சம்பவம் தொடா்பாக பசவேஸ்வராநகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருக்கிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com