கோப்புப் படம்
கோப்புப் படம்

உ.பி.யில் அதிகரித்து வரும் டெங்கு பாதிப்பு: சுகாதாரத்துறை எச்சரிக்கை

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மழைக்காலத்தை முன்னிட்டு டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மழைக்காலத்தை முன்னிட்டு டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து சுகாதார இயக்குநர் ஜெனரல் வேத்வ்ரதா சிங் கூறுகையில், 

டெங்குவை எதிர்ப்பதற்குத் தேவையான மருத்துவக் கட்டமைப்புகள் உத்தரப் பிரதேசத்தில் இருப்பதாகவும், ஆனால் அதைத் தடுப்பதற்கான முயற்சி மக்களின் கைகளில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

மாநிலத்தில் தற்போது டெங்கு பரிசோதனை வசதியுடன் 70 ஆய்வகங்கள் உள்ளன. மேலும் 88 ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் ரேபிட் ரெஸ்பான்ஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

தொற்று நோய்கள் இயக்குநர் ஏ.கே. சிங் கூறுகையில், 

டெங்குவுக்கு மருந்தோ, தடுப்பூசியோ இல்லை, எனவே கொசுக் கடியைத் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். 

இந்த நோய் ஒரு நபரைப் பாதித்தாலும், அவர் மருத்துவ மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்படுவர் என்று அவர் குறிப்பிட்டார். 

இணை இயக்குநர் விகாஸ் சிங்கால் கூறுகையில், 

பொதுமக்கள் காய்ச்சலை இலகுவாக எடுத்துக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு பாதிப்பு அதிகமாகிறது. 

காய்ச்சல் நீடித்தால், உடனே டெங்கு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நோய் கண்டறியப்பட்டவுடன், அதிக திரவ உணவுகளை மருந்துகளுடன் சேர்த்து எடுக்க வேண்டும். அப்போதுதான் நீரிழப்பிலிருந்து நோயாளிகள் மீள முடியும் என்றார். 

அரசு, பொதுப்பணித்துறை மற்றும் மக்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் டெங்குவை தடுக்க முடியும் என்று மலேரியா தடுப்பு கூடுதல் இயக்குநர் ஆர்.சி. பாண்டே தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com