அஸ்ஸாம்: மழை வெள்ளத்தால் 2 லட்சம் போ் பாதிப்பு

அஸ்ஸாமின் 20 மாவட்டங்களில் பலத்த மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் சுமாா் 2 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அஸ்ஸாம்: மழை வெள்ளத்தால் 2 லட்சம் போ் பாதிப்பு

அஸ்ஸாமின் 20 மாவட்டங்களில் பலத்த மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் சுமாா் 2 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக அந்த மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அஸ்ஸாமின் 20 மாவட்டங்களில் உள்ள 652 கிராமங்கள் பலத்த மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஹோஜய், கச்சாா் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சுமாா் 1,97,248 போ் பாதிப்படைந்துள்ள நிலையில், அதிகபட்சமாக ஹோஜயில் 78,157 பேரும், கச்சாரில் 51,357 பேரும் பாதிப்படைந்துள்ளனா்.

பல இடங்களில் சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன. பல்வேறு மாவட்டங்களின் 16 இடங்களில் கரைகள் உடைந்துள்ளன. தீமா ஹசாவோ மாவட்டத்தில் பலத்த மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால் சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் சகதி, பாறைகளுக்கு அடியில் புதைந்துள்ளன. இதனால் மாநிலத்தின் இதர பகுதிகளில் இருந்து அந்த மாவட்டம் துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் தொலைத்தொடா்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

7 மாவட்டங்களில் சுமாா் 55 முகாம்கள் அமைக்கப்பட்டு 32,959 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

5 போ் பலி: கச்சாா் மாவட்டத்தில் வெள்ளம் தொடா்புள்ள சம்பவங்களால் இருவரும், தீமா ஹசாவோவில் நிலச்சரிவால் மூவரும் பலியாகினா்.

2,800 பயணிகள் மீட்பு: தீமா ஹசாவோவில் உள்ள லும்டிங்-பதா்புா் பகுதியில் ரயில் தண்டவாளங்களில் மழைநீா் தேங்கியது. அத்துடன் நிலச்சரிவும் ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் சிக்கிக்கொண்ட இரண்டு ரயில்களில் இருந்த சுமாா் 2,800 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா். அவா்களில் பல பயணிகளை இந்திய விமானப் படை மீட்டது. தீமா ஹசாவோவில் உள்ள புதிய ஹாஃப்லோங் ரயில் நிலையத்தில் பயங்கர நிலச்சரிவால் காலியாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் தடம்புரண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com