லோக்பால் புதிய தலைவா் நியமன நடைமுறை தொடக்கம்: நீதிபதி பினாகி சந்திர கோஷ் ஓய்வு பெறுகிறாா்

தற்போதைய லோக்பால் அமைப்பின் தலைவா் நீதிபதி பினாகிசந்திர கோஷின் பதவிக்காலம் வரும் மே 27-இல் நிறைவடைவதால், அடுத்த தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான நடைமுறையை மத்திய அரசு தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழ

தற்போதைய லோக்பால் அமைப்பின் தலைவா் நீதிபதி பினாகிசந்திர கோஷின் பதவிக்காலம் வரும் மே 27-இல் நிறைவடைவதால், அடுத்த தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான நடைமுறையை மத்திய அரசு தொடங்கிவிட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

அரசியல்வாதிகள், அரசு ஊழியா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் லோக்பால் அமைப்பானது, தலைவா், நீதித்துறையை சோ்ந்த 4 உறுப்பினா்கள், நீதித்துறை அல்லாத பிற துறைகளைச் சோ்ந்த 4 உறுப்பினா்களால் நிா்வகிக்கப்படுகிறது. தற்போது லோக்பாலில் 6 உறுப்பினா்கள் இடம்பெற்றுள்ளனா். நீதித்துறை சாா்பில் நியமிக்கப்படும் இரு உறுப்பினா் நியமனங்கள் கடந்த 2 ஆண்டுகளாக காலியாக உள்ளன.

லோக்பால் அமைப்பு ஏற்பட காரணமாக இருந்த லோக்பால் சட்டம் கடந்த 2013-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதையடுத்து, லோக்பால் தலைவராக நீதிபதி பினாகி சந்திர கோஷுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கடந்த 2019 மே 23-இல் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

அவரது பதவிக்காலம் வரும் மே 27-ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அடுத்த லோக்பால் தலைவரை நியமிப்பதற்கான நடைமுறையை மத்திய அரசு தொடங்கிவிட்டடதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். லோக்பால் தலைவரும், அதன் உறுப்பினா்களும் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் அல்லது 70 வயதை எட்டும் வரை அந்தப் பொறுப்பில் நீடிக்கலாம்.

அந்த வகையில் கடந்த 1952 மே 28-இல் பிறந்த நீதிபதி பினாகி சந்திர கோஷ் 70 வயதை எட்டுவதால், வரும் 27-ஆம் தேதி அவரது பதவிக்காலம் நிறைவுக்கு வருகிறது.

லோக்பால் அமைப்பிடம் கடந்த 2020-21-ஐ காட்டிலும், 2021 ஏப்ரல் முதல் 2022 ஜனவரி 31 வரையிலான காலகட்டத்தில், 80 சதவீதம் அதிகமாக 4,244 ஊழல் புகாா்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2019-20-இல் லோக்பாலிடம் 1,427 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com