அசாமில் வெள்ளத்திலிருந்து விலங்குகளைப் பாதுகாக்க புதிய திட்டம்

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விலங்குகளைப் பாதுகாக்க வனத்துறை சுமார் 40 மேடான நிலங்களின் கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக வனத்துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா தெரிவித்தார். 
அசாமில் வெள்ளத்திலிருந்து விலங்குகளைப் பாதுகாக்க புதிய திட்டம்

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விலங்குகளைப் பாதுகாக்க வனத்துறை சுமார் 40 மேடான நிலங்களின் கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக வனத்துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா தெரிவித்தார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 

மாநிலத்தின் காசிரங்கா மற்றும் பிற தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் காசிரங்காவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. 

இந்நிலையில், காசிரங்காவில் மீட்பு நடவடிக்கைகளுக்காக பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கான உணவு  சேவைகளை வழங்க அரசு தயாராக உள்ளது. 

வனத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் சுறுசுறுப்பாக இருப்பதால், அவர்களை மீட்க 25க்கும் மேற்பட்ட படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 

வெள்ள நெருக்கடியை சிறந்த முறையில் நிர்வகிக்க அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதேசமயம் விலங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறை சுமார் 40 மேடான நிலங்களின் கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. 

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, 

கச்சார் மாவட்டத்தில் 96,697 பேரும், ஹோஜாயில் 88,420 பேரும், நாகோனில் 58,975 பேரும், தர்ரங்கில் 56,960 பேரும், பிஸ்வநாத்தில் 39,874 பேரும், உடல்குரி மாவட்டத்தில் 22,526 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். .

67 வருவாய் வட்டங்களுக்குட்பட்ட 1,089 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 32944.52 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

இதுதவிர, மாவட்ட நிர்வாகம் 89 நிவாரண முகாம்களையும், 89 விநியோக மையங்களையும் அமைத்து அதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 39,558 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com