தேசிய உயிர் எரிவாயு திட்டத்தில் சட்டத்திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2018ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய உயிர் எரிபொருள் திட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (18/05/2022)  ஒப்புதல் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

2018ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேசிய உயிர் எரிபொருள் திட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (18/05/2022)  ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய உயிர் எரிவாயு திட்டம் 2018 கடந்த 2009ஆம் ஆண்டு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்தினால் இயற்றப்பட்ட தேசிய உயிர் எரிபொருள்கள் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட திட்டமாக கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி  பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தினால் அறிவிக்கப்பட்டது.

உயிர் எரிபொருள் சார்ந்த துறையில் சமீபக காலமாக ஏற்பட்டிருக்கும் அதிக அளவிலான முன்னேற்றத்தின் காரணமாக, நிரந்த குழு கொடுத்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் தேசிய உயிர் எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழு முக்கிய முடிவினை எடுத்துள்ளது. அதன்படி, தேசிய உயிர் எரிபொருள் திட்டத்தில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 1, 2023ஆம் ஆண்டு முதல் 20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு நடைமுறைக்கு வரும் என சட்டத்திருத்தம் கொண்டுவரப் பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு இந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியானது.

உயிர் எரிபொருள் திட்டத்தில் 20 சதவிகிதம் எத்தனால் கலந்த பெட்ரோல் என சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதால் அரசிற்கு மூலப்பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. அதே போல எத்தனால் உற்பத்தி மையங்களை அதிகரிக்க இந்தியாவில் உருவாக்குவோம் (make in india) என்ற திட்டத்தின் மூலம் முயற்சி செய்து வருகிறது. இதன்மூலம் வெளிநாடுளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் எரிபொருள் அளவு குறையும். அதிகப்படியான அந்நிய செலவாணி எரிபொருளுக்கு வழங்கப்படுவது தடுக்கப்படும். 

இந்த புதிய சட்டத்திருத்தம் மூலம் பிரதமரின் தொலைநோக்கு பார்வையான  ஆற்றலில் இந்தியா 2047-ல் சுதந்திரமான நாடாக மாற்றமடையும் என்பது  குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com