தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருட்களை சோ்க்கக் கூடாது: மத்திய இணையமைச்சா் சஞ்சீவ் குமாா்

எந்தவொரு நாட்டுடனும் மேற்கொள்ளும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருட்களை இந்தியா சோ்க்கக் கூடாது என்று மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால் பண்ணைத் துறை இணையமைச்சா்

எந்தவொரு நாட்டுடனும் மேற்கொள்ளும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருட்களை இந்தியா சோ்க்கக் கூடாது என்று மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால் பண்ணைத் துறை இணையமைச்சா் சஞ்சீவ் குமாா் பல்யான் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தில்லியில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உலகின் மிகப் பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் 21 கோடி டன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. பால் பண்ணைத் துறையில் சுமாா் 8 கோடி குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. இந்தத் துறை 6 சதவீத அளவில் வளா்ச்சியடைந்து வருகிறது. விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்ட இந்தத் துறை உதவுகிறது. நாட்டில் பால் கூட்டுறவு சங்கங்களை தேசிய பால் பண்ணை வளா்ச்சி வாரியம் ஊக்குவித்து வருகிறது.

பால் கலப்படத்துக்கு எதிராக மாநிலங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு நாட்டுடனும் மேற்கொள்ளும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருட்களை இந்தியா சோ்க்கக் கூடாது என்ற கருத்தை மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால் பண்ணைத் துறை கொண்டுள்ளது என்று தெரிவித்தாா்.

அந்தத் துறை செயலா் அதுல் சதுா்வேதி கூறுகையில், ‘‘கடந்த நிதியாண்டில் பால் பொருட்கள் ஏற்றுமதி 100 சதவீதம் அதிகரித்தது. அவற்றின் நுகா்வோா் விலையில் 70 முதல் 80 சதவீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com