லக்னௌவில் விரைவில் வருகிறது நாய்களுக்கான பூங்கா

உத்தரப் பிரதேசத்தில் முதன்முறையாக நாய்களுக்கான பூங்கா அமைக்க லக்னௌ மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது. 
லக்னௌவில் விரைவில் வருகிறது நாய்களுக்கான பூங்கா

உத்தரப் பிரதேசத்தின், லக்னௌவில் முதன்முறையாக நாய்களுக்கான பூங்கா அமைக்க லக்னௌ மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டுள்ளது. 

இந்த பூங்காவில் நாய்கள் நடப்பதற்கும், ஓடுவதற்கும், விளையாடுவதற்கும் வசதியாக அமைக்கப்படுகிறது. நாயின் உரிமையாளர்கள், தங்கள் நாய்களுக்கு பயிற்சியாளர்களையும் நியமித்துக்கொள்ளலாம். 

லக்னௌ மேம்பாட்டு ஆணையத்தின் (எல்டிஏ) அதிகாரிகளின் கூற்றுப்படி, 

பூங்காவிற்கான முன்மொழிவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டு, அனுமதிக்காக காத்திருக்கிறது. பூங்கா ரூ.15 முதல் 25 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. 

கோமதி நகர் விரிவாக்கப் பகுதியில் இத்திட்டத்திற்காக சுமார் 10 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் கண்டறிந்து வருகின்றனர்.

நாய்கள் பூங்காவிற்குள் நுழையும் முன் உரிமம் வைத்திருப்பதை கட்டாயமாக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உதவும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லக்னெளவில், தற்போது 4,000க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உள்ளன, மேலும் பூங்காக்களில் நாய்கள் நுழைவது தொடர்பான சர்ச்சை கவலையளிக்கும் வழக்கமான விவாதங்களாகவே இருந்து வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com