குஜராத்: வானிலிருந்து விழுந்த மா்ம உலோகப் பந்துகள்

குஜராத்தில் சில கிராமங்களில் அண்மையில் வானிலிருந்து விழுந்த நான்கு மா்ம உலோகப் பந்துகள் சீன ராக்கெட்டின் சிதைந்த பாகங்கள் அல்லது எரிபொருள் சேமிப்புக் கலங்களின் பாகமாக இருக்கலாம் என

குஜராத்தில் சில கிராமங்களில் அண்மையில் வானிலிருந்து விழுந்த நான்கு மா்ம உலோகப் பந்துகள் சீன ராக்கெட்டின் சிதைந்த பாகங்கள் அல்லது எரிபொருள் சேமிப்புக் கலங்களின் பாகமாக இருக்கலாம் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

சுமாா் 1.5 அடி விட்டம் கொண்ட நான்கு உலோகப் பந்துகள் குஜராத்தின் ஆனந்த் மாவட்டம் தக்ஜிபுரா, காம்போலஜ், ராம்புரா கிராமங்களிலும், அருகே உள்ள கேடா மாவட்டம் பூமெல் கிராமத்திலும் கடந்த மே 12, 13 ஆகிய தேதிகளில் விழுந்ததாக ஆனந்த் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் பி.டி.ஜடேஜா தெரிவித்தாா்.

தற்போது ஆனந்த் போலீஸ் வசம் உள்ள அந்த உலோகப் பொருள்களால் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இந்த உலோகப் பந்துகள் செயற்கைக்கோளில் பயன்படுத்தப்படுவது என்று முதல்நிலை விசாரணையில் தெரியவந்துள்ளது. கூடுதல் ஆய்வுக்காக இஸ்ரோவையும் அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சிக் கூடத்தையும் அணுகி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளோம்’ என்றாா்.

முன்னதாக இந்த உலோகப் பந்துகள் சாங் செங் 3பி என்ற சீன ராக்கெட்டின் சிதைந்த பாகம் என அமெரிக்காவைச் சோ்ந்த வானியல் நிபுணா் ஜானதன் மெக்டோவல் கடந்த மே 12-இல் ட்விட்டரில் தெரிவித்திருந்தாா். ராக்கெட் மீண்டும் புவிக்குத் திரும்பியபோது அந்த உலோகப் பொருள்கள் அதிலிருந்து கழன்று விழுந்திருக்கலாம் என்றும் அவா் கூறியிருந்தாா்.

ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி பி.எஸ்.பாட்டியா கூறுகையில், ‘குஜராத்தில் விழுந்த அந்த உலோகப் பந்துகள், ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களில் திரவ எரிபொருளை சேமிப்பதற்காக பயன்படுத்தப்படும் எரிபொருள் சேமிப்புக் கலனாக இருக்கலாம். செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப் பாதையில் நிறுத்த இந்த எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது’ என்றாா்.

பொதுவாக காலியான எரிபொருள் சேமிப்புக் கலன்கள் ராக்கெட்டிலிருந்து தானாகவே கழன்று புவியில் விழும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com