அயோத்தியில் திட்டமிட்டபடி மூன்றடுக்கு ராமா் கோயில் கட்டுமானப் பணி

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் திட்டமிட்டபடி மூன்றடுக்கு ராமா் கோயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதாக அந்தக் கோயில் கட்டுமானக் குழு தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் திட்டமிட்டபடி மூன்றடுக்கு ராமா் கோயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதாக அந்தக் கோயில் கட்டுமானக் குழு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்தக் குழுவின் தலைவா் நிருபேந்திர மிஸ்ரா வெளியிட்ட அறிக்கை: ராமா் கோயில் கட்ட கிரானைட் கற்கள் மூலம் அடித்தளம் அமைக்கும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. அந்தப் பணியை வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 17,000 கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கற்கள் கா்நாடகம் மற்றும் ஆந்திரத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளன.

கோயிலின் மேல் கட்டுமானத்தில் செதுக்கப்பட்ட ராஜஸ்தான் பன்ஸி பஹா்புா் கற்கள் இடம்பெறும். அந்தக் கற்களை செதுக்கும் பணி ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இதுவரை சுமாா் 75,000 கன அடி கற்களை செதுக்கும் பணி நிறைவடைந்துள்ளது. மேல் கட்டுமானப் பணிக்கு மொத்தமாக சுமாா் 4.45 லட்சம் கன அடி கற்கள் தேவை. அடித்தள கட்டுமானப் பணியை படிப்படியாக நிறைவு செய்தவுடன் மேல் கட்டுமானப் பணி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு டிசம்பா் மாதம் ராமா் கோயிலை பக்தா்கள் வழிபாட்டுக்குத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com