உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக5 நீதிபதிகள் பதவி உயா்வு: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம், ஐந்து நீதிபதிகளை பல்வேறு மாநில உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம், ஐந்து நீதிபதிகளை பல்வேறு மாநில உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொலீஜியம் ஆலோசனைக் கூட்டத்தின்போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தின் அதிகாரபூா்வ இணையதள பக்கத்திலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி விபின் சாங்கியை உத்தரகண்ட் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி அம்ஜத் ஏ.சயீதை ஹிமாசல பிரதேச உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.ஷிண்டேயை ராஜஸ்தான் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதி ராஷ்மின் எம். சாயாவை குவாஹாட்டி உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயானை அதே நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இதுதவிர, தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மாவை தில்லி உயா்நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com