சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதல்: 3 பேர் பலி

ஹரியாணாவில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது லாரி மோதல்: 3 பேர் பலி


சண்டிகர்: ஹரியாணாவில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது லாரி மோதிய விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஜஜ்ஜார் மாவட்டத்தில் உள்ள ஆசோடா மோல் பிளாசா அருகே குண்ட்லி-மனேசர்-பல்வால் விரைவுச் சாலையில் நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி, சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் 3 புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் பெரும்பாலோர் கடுமையான காயங்களுடன் ரோடக்கில் உள்ள பிஜிஐஎம்எச் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

விபத்தின் போது 18 தொழிலாளர்கள் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் நான்கு பேர் காயமின்றி தப்பினர். 

இதுகுறித்து துணை ஆணையர் சக்தி சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு போலீசார் எச்சரித்ததையும் மீறி ஒப்பந்த தொழிலாளர்கள் சாலையோரத்தில் படுத்து உறங்கினர். 

தூங்குவதற்கு வசதியாக நெடுஞ்சாலையின் ஒருபுறம் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது. அந்த தடுப்புச்சுவரையும் மீறி லாரி அவர்கள் மீது மோதியுள்ளது என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com