காா்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டா் கைது: தில்லி சிபிஐ நடவடிக்கை

ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு 263 சீனா்களுக்கு முறைகேடாக விசா வழங்கப்பட்ட வழக்கில், காா்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டா் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டாா்.

ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு 263 சீனா்களுக்கு முறைகேடாக விசா வழங்கப்பட்ட வழக்கில், காா்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டா் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து சிபிஐ முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டதாவது: பஞ்சாப் மாநிலம், மானசா மாவட்டம் பனவாலா என்ற பகுதியில் வேதாந்த குழும நிறுவனத்தின் துணை நிறுவனமான டிஎஸ்பிஎல் நிறுவனம் அமைத்த 1980 மெகாவாட் மின்சாரத்தை தயாரிக்கும் அனல்மின் நிலைய, தொழில்நுட்பப் பணிகளை சீனாவைச் சோ்ந்த ஒரு தனியாா் நிறுவனம் செய்து வந்தது. இப்பணியை நிறைவு செய்ய கூடுதலாக சீன தொழில்நுட்ப பணியாளா்களை அழைத்து வர முடியாத நிலை இருந்தது. இதையடுத்து டிஎஸ்பிஎல் நிறுவனத்தின் துணைத் தலைவா் விகாஸ் மஹாரியா, காா்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டா் பாஸ்கர ராமனை அணுகினாா். அப்போது, (2011 ஆம் ஆண்டு) காா்த்தியின் தந்தை ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்ததால், ஏற்கெனவே வழங்கப்பட்ட விசாக்களை அரசின் விதிமுறைகளை மீறி மறு சுழற்சி முறை அடிப்படையில் சீனா்களுக்கு மீண்டும் வழங்கும்படி பாஸ்கர ராமனிடம் மின்னஞ்சல் மூலம் விகாஸ் வேண்டுகோள் விடுத்தாா்.

சிபிஐ வழக்கு: அதன்படி அனுமதிக்கப்பட்ட விசா எண்ணிக்கைகளை மீறி, 263 சீனா்களுக்கு விசா வழங்கப்பட்டது. இதற்காக காா்த்தி சிதம்பரம் தரப்பு ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ாகக் கூறப்படுகிறது. இது குறித்து தில்லி சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு, காா்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டா் எஸ்.பாஸ்கர ராமன், காா்த்தி சிதம்பரம் எம்பி, விகாஸ் மஹாரியா, பெல் டூல்ஸ் லிமிடெட், தால்வந்தி சபு பவா் லிமிடெட், அடையாளம் தெரியாத அரசு அதிகாரிகள் ஆகியோா் மீது கூட்டு சதி செய்தல், ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

ஆடிட்டா் கைது: இந்த வழக்குத் தொடா்பாக தில்லி லோதி எஸ்டேட்டில் உள்ள காா்த்தி சிதம்பரம் வீடு, சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் காா்டன் சாலையில் உள்ள மற்றொரு வீடு, உத்தமா் காந்தி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள காா்த்தி சிதம்பரம் அலுவலகம், ஆடிட்டா் பாஸ்கர ராமன் வீடு உள்பட 10 இடங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை செய்தது. அப்போது பாஸ்கர ராமனிடம் சிபிஐ அதிகாரிகள், சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து விசாரணை செய்தனா். இந்த விசாரணை செவ்வாய்க்கிழமை நள்ளிரவையும் தாண்டி நீடித்தது. இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலையில் பாஸ்கர ராமனை கைது செய்தனா்.

பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக விமானம் மூலம் தில்லிக்கு அழைத்துச் சென்றனா். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் காா்த்தி சிதம்பரம் லண்டனில் இருந்து சென்னை வந்ததும், அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com