மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: தெலங்கானாவில் மதுபானங்களின் விலை 20-25% உயர்வு

மதுபானப் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தெலங்கானா அரசு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 
மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: தெலங்கானாவில் மதுபானங்களின் விலை 20-25% உயர்வு

ஹைதராபாத்: மதுபானப் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தெலங்கானா அரசு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

வருவாயை அதிகரிக்கும் நோக்கில் தெலங்கானாவில் மதுபானங்களின் விலையை 20 முதல் 25 சதவீதம் வரை அம்மாநில அரசு உயர்த்தியுள்ளது. 

அனைத்து பிராண்டு மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 கோடி முதல் ரூ.7,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தில் 2021-22ல் மதுபான விற்பனை மூலம் ரூ.30,000 கோடி வருமானம் ஈட்டியது. இதன் வரி வருமானம் ரூ.12,000 கோடியாக இருந்தது. 

1,000 மில்லி மதுபானத்தின் விலையை ரூ.120 உயர்ந்துள்ளது. இதன்படி  ரூ.495ல் இருந்து ரூ.615 ஆக அதிகரித்துள்ளது. 

குவார்ட்டர் பாட்டிலின் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து வகை பீர்களும்,  குறைந்தபட்சம் ரூ.10 வரை உயர்ந்துள்ளது. 

புதிய விலைப் பட்டியல் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. மதுபானக் கடைகள், பார்கள், மதுக்கடைகளில் உள்ள மதுபானக் கடைகளை கலால் துறை அதிகாரிகள் புதன்கிழமை இரவு சோதனை நடத்தினர். வியாழக்கிழமை முதல் புதிய விலையில் விற்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

மாநிலத்தில் கரோனா ஊரடங்குப் பிறகு, கடைசியாக 2020 மே மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com