இமயமலையில் திறக்கப்பட்ட உலகின் மிக உயரமான வானிலை மையம்

நேஷனல் ஜியோகிராஃபிக் சொசைட்டி (National geographic society) வல்லுநர்களால் உலகின் மிக உயரமான வானிலை மையம் இமயமலையில் 8,830 மீட்டர் உயரத்தில் இன்று (வியாழக்கிழமை) அமைக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நேஷனல் ஜியோகிராஃபிக் சொசைட்டி (National geographic society) வல்லுநர்களால் உலகின் மிக உயரமான வானிலை மையம் இமயமலையில் 8,830 மீட்டர் உயரத்தில் இன்று (வியாழக்கிழமை) அமைக்கப்பட்டுள்ளது.

இமயமலையில் அமைந்துள்ள இந்த வானிலை மையமானது தானாக இயங்கும் திறன் கொண்டது என நேபாளத்தின் நீரியல் மற்றும் வானிலைத் துறை தெரிவித்துள்ளது. மேலும், சூரிய சக்தி ஆற்றலின் உதவியுடன் இயங்கும் இந்த வானிலை நிலையம் இமயமலையின் உச்சிப்பகுதிக்கு சில மீட்டர்கள் கீழே அமைக்கப்பட்டுள்ளது.

இமயமலைப் பகுதியில் உள்ள வெப்பநிலை, காற்றின் வேகம் மற்றும் திசை போன்றவற்றை அறிந்து கொள்ள இந்த வானிலை மையம் உதவியாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வானிலை மையத்தை அமைப்பதற்காக நேஷனல் ஜியோகிராஃபிக் சொசைட்டி (National geographic society) மற்றும் நேபாள நாட்டிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருந்தது. அதன்படி, 2025ஆம் ஆண்டு வரை நேஷனல் ஜியோகிராஃபிக் சொசைட்டியும் அதன்பின்னர் நேபாள அரசின் கட்டுப்பாட்டின் கீழும் இயங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com