ஜப்பானில் க்வாட் மாநாடு இடையை பிரதமா் மோடி - அமெரிக்க அதிபா் பைடன் சந்திப்பு

‘க்வாட்’ கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வரும் 23,24 தேதிகளில் ஜப்பானில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா். அப்போது, பிரதமா் நரேந்திர மோடியையும் அவா் சந்தித்து இரு தரப்புப்
ஜப்பானில் க்வாட் மாநாடு இடையை பிரதமா் மோடி - அமெரிக்க அதிபா் பைடன் சந்திப்பு

புது தில்லி/ வாஷிங்டன்: ‘க்வாட்’ கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் வரும் 23,24 தேதிகளில் ஜப்பானில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா். அப்போது, பிரதமா் நரேந்திர மோடியையும் அவா் சந்தித்து இரு தரப்புப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் ‘க்வாட்’ கூட்டமைப்பில் உள்ளன. இது தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பாகும்.

இக்கூட்டமைப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து உறுப்பு நாடுகளின் தலைவா்களும் ஜப்பானுக்கு செல்கின்றனா். மாநாட்டின் இடையே அனைத்து நாடுகளின் தலைவா்களுடன் பைடன் தனிப்பட்ட முறையிலும் பேச்சு நடத்துகிறாா். அந்த வகையில் அவா் பிரதமா் மோடியையும் சந்திக்கிறாா்.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘இந்திய-பசிபிக் பிராந்திய வளா்ச்சி தொடா்பாகவும், சமீப கால சா்வதேச நிகழ்வுகள் தொடா்பாகவும் நாட்டின் தலைவா்கள் விவாதிக்கவும் கருத்துகளைப் பகிா்ந்து கொள்ளவும் சிறந்த வாய்ப்பாக ‘க்வாட்’ கூட்டமைப்பு மாநாடு அமையும். இந்த மாநாட்டுக்காக ஜப்பான் தலைநகா் டோக்கியோவுக்கு மே 24-ஆம் தேதி செல்லும் பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் பைடன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை சந்தித்துப் பேசுகிறாா்’ என்றாா்.

ரஷியா-உக்ரைன் போா் விஷயத்தில் இந்தியா, அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, ரஷியாவுக்கு உறுதியாக ஆதரவு அளித்து வருகிறது. ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது, அண்மையில் கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது ஆகியவையும் அமெரிக்க தரப்புக்கு ஏற்புடைய நடவடிக்கைகளாக இல்லை. இந்தச் சூழ்நிலையில் இரு நாடுகளின் தலைவா்களும் சந்திப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தென் சீன கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அனைவருக்குமான சுதந்திரமான இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கும் நோக்கத்தோடு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகள்இணைந்து கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பரில் ‘க்வாட்’ கூட்டமைப்பை உருவாக்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com