அனைத்து மொழிகளும் 'பாரதியத்தின்' ஆன்மாவாகவே பாஜக கருதுகிறது: மோடி

நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும், பாரதியத்தின் ஆன்மாவாகவே பாஜக கருதுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அனைத்து மொழிகளும் 'பாரதியத்தின்' ஆன்மாவாகவே பாஜக கருதுகிறது: மோடி
அனைத்து மொழிகளும் 'பாரதியத்தின்' ஆன்மாவாகவே பாஜக கருதுகிறது: மோடி


ஜெய்ப்பூர்: நாட்டில் உள்ள அனைத்து மொழிகளும், பாரதியத்தின் ஆன்மாவாகவே பாஜக கருதுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பாஜக தலைவர்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மொழி அடிப்படையில் சர்ச்சையை ஏற்படுத்த முயல்பவர்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பாஜக தலைவர்களை கேட்டுக் கொண்டார்.

நாட்டின் கலாசாரம் மற்றும் மிகச் சிறந்த பண்பாட்டினை, நாட்டின் பெருமையாக இணைக்கும் பணியை பாஜக செய்வதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையில், அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், பாஜகவை பொறுத்தவரை, பாரதியம் என்பதன் ஆன்மாவாக அனைத்து மொழிகளும் இருப்பதாகவும், நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு அவை உதவும் என்றும் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com