இபிஎஃப்ஓ அமைப்பில் மார்ச்சில் 15.32 லட்சம் பேர் சேர்ப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 15.32 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.
இபிஎஃப்ஓ அமைப்பில் மார்ச்சில் 15.32 லட்சம் பேர் சேர்ப்பு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 15.32 லட்சம் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள தற்காலிக தரவின்படி, கடந்த மார்ச் மாதத்தில் 15.32 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில், 2.47 லட்சம் சந்தாதாரர்கள் அதிகம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

புதிதாக சேர்ந்த 15.32 லட்சம் சந்தாதாரர்களின் 9.68 லட்சம் பேர் புதிய உறுப்பினர்கள். இவர்கள் முதல் முறையாக இபிஎஃப்ஓ-வில் சேர்ந்துள்ளனர். இது முந்தைய மாதத்தை காட்டிலும் 81,327 அதிகமாகும். சுமார் 5.64 லட்சம் சந்தாதாரர்கள், அமைப்பில் இருந்து வெளியேறி மீண்டும் சேர்ந்துள்ளனர்.

இவர்கள் முந்தைய கணக்கில், தற்போதைய பிஎஃப் கணக்கை இணைத்துள்ளனர்.  

22 வயது முதல் 25 வயது வரையிலானவர்கள் மார்ச் மாதத்தில் 4.11 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இதையடுத்து 29-35 வயது வரம்பில் 3.17 லட்சமும், 18-21 வயது வரம்பில் மார்ச் மாதத்தில் 2.93 லட்சமும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆகும்.

மகாராஷ்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா மற்றும் தில்லி ஆகிய மாநிலங்கள் தொடர்ந்து சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கின்றன. இந்த மாநிலங்களில் மட்டும்  தோராயமாக 10.14 லட்சம் சந்தாதாரர்கள் மார்ச் மாதத்தில் இணைந்துள்ளனர். இது  (66.18%) ஆகும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com