தில்லியின் மின் தேவை 7,070 மெ.வ. தாண்டியது

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வரும்நிலையில், மின் தேவையும் இதுவரை இல்லாத அளவில் வியாழக்கிழமை இரவு 7,070 மெகா வாட்டை தாண்டி பதிவானது.
தில்லியின் மின் தேவை 7,070 மெ.வ. தாண்டியது

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வரும்நிலையில், மின் தேவையும் இதுவரை இல்லாத அளவில் வியாழக்கிழமை இரவு 7,070 மெகா வாட்டை தாண்டி பதிவானது.

இந்த அளவுக்கான மின் தேவையை தாண்டி பதிவாகும் நான்காவது ஆண்டு இதுவாகும் என்று மின் விநியோக நிறுவன அதிகாரி தெரிவித்தாா்.

வியாழக்கிழமை இரவு 11.24 மணிக்கு தில்லியின் மின் தேவை 7,070 மெ.வ-ஆக பதிவானது.

கடந்த 2018, ஜூலை 10 ஆம் தேதி 7,016 மெ.வ., 2019-இல் ஜூலை 2-இல் 7,409 மெ.வ., 2021-ஜூலை 2-இல் 7,323 மெ.வ. ஆக தில்லியின் மின் தேவை பதிவாகி இருந்தது. 2020-இல் 6314 மெ.வ. ஆக இருந்ததது.

எனினும், நிகழாண்டு மின் தேவை 8,200 மெ.வ. அதிகரிக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com