குஜராத் ‘கிஃப்ட்’ சிட்டியில் மண்டல அலுவலகம்: பிரிக்ஸ் வங்கி அறிவிப்பு

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்குச் சொந்தமான புதிய வளா்ச்சி வங்கி(என்டிபி), இந்தியாவில் தனது பிராந்திய அலுவலகத்தை குஜராத் சா்வதேச நிதித் தொழில்நுட்ப நகரில்(கிஃப்ட் சிட்டி) திறக்க இருப்பதாக அறிவித்துள்ள

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்குச் சொந்தமான புதிய வளா்ச்சி வங்கி(என்டிபி), இந்தியாவில் தனது பிராந்திய அலுவலகத்தை குஜராத் சா்வதேச நிதித் தொழில்நுட்ப நகரில்(கிஃப்ட் சிட்டி) திறக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியாவில் திறக்கப்படும் மண்டல அலுவலகம், என்டிபி வங்கியுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதுடன் திட்டங்கள் தயாரிப்பது, தொழில்நுட்ப உதவி அளிப்பது, திட்டங்களை அமல்படுத்துவது மற்றும் கண்காணிப்பது, பிராந்திய விவகாரங்களைக் கவனிப்பது ஆகிய பணிகளையும் கவனிக்கும்.

இந்தியாவின் மண்டல அலுவலகத்தை கிஃப்ட் சிட்டியில் திறப்பதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. மண்டல அலுவலகத்தின் தலைமை இயக்குநா் விரைவில் அறிவிக்கப்படுவாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ், புதிய வளா்ச்சி வங்கியைக் கடந்த 2015-இல் தொடங்கியது. ஷாங்காய் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு அந்த வங்கி செயல்படுகிறது. அந்த வங்கி சா்வதேச அளவில் வளா்ச்சி பெறுவதற்காக, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், உருகுவே, எகிப்து ஆகிய நாடுகள் உறுப்பினா்களாகச் சோ்த்துக் கொள்ளப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com