ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீா்திருத்தம் தேவை: ராம்நாத் கோவிந்த்

 ‘சமகால உலக யதாா்த்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட சா்வேதச அமைப்புகளில் அவசர சீா்திருத்தம் அவசியம்’

 ‘சமகால உலக யதாா்த்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட சா்வேதச அமைப்புகளில் அவசர சீா்திருத்தம் அவசியம்’ என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தினாா்.

கரீபியன் தீவு நாடான செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடீன்ஸுக்கு வியாழக்கிழமை சென்ற குடியரசுத் தலைவா், அந்த நாட்டின் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் உரையற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:

நாடுகள் ஒன்றோடு ஒன்று சாா்ந்துள்ள இன்றைய உலகில் பலதரப்பு உறவு என்பது மிகுந்த அவசியமானதாகும். இந்த உறவு திறம்பட விளங்குவதற்கு, சா்வதேச அமைப்புகளில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்.

இரண்டு உலகப் போா்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட சா்வதேச அமைப்புகள் அனைத்தும், மேலும் ஓா் உலகப் போா் ஏற்படுவதைத் தடுப்பதையே பிரதான நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்தன.

இன்றைய சிக்கலான பிரச்னைகளை உலகம் திறம்பட எதிா்கொள்ள, சா்வதேச அமைப்புகளை விரிவுபடுத்தி, சீா்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

அனைவரையும் உள்ளடக்கிய உலக நடைமுறை என்பது, உலகளாவிய; சட்டத்தின் அடிப்படையிலான; அனைவருக்குமான; வெளிப்படையான; பாகுபாடற்ற நடைமுறைகளை உறுதிப்படுத்துதல் என்பதே இந்தியாவின் கருத்து.

எனவே, சமகால உலக யதாா்த்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட சா்வேதச அமைப்புகளில் அவசர சீா்திருத்தம் அவசியம் என்று ராம்நாத் கோவிந்த் கூறினாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, ஃபிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் நிறந்தர உறுப்பினா்களாகவும், மேலும் 10 நாடுகள் நிரந்தரமில்லா உறுப்பினா்களாகவும் இடம்பெற்றுள்ளன. நிரந்தரமில்லா உறுப்பு நாடுகள் 2 ஆண்டுகளுக்கு தற்காலிக உறுப்பினா்களாக தோ்வு செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு ஜனவரியில், 2 ஆண்டுகளுக்கான நிரந்தரமில்லா உறுப்பு நாடாக இந்தியா சோ்ந்தது. இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிக நிரந்தர உறுப்பினா்கள் இடம்பெற்று, அமைப்பை மேலும் திறன் மிக்கதாக மாற்றும் வகையில் சீா்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியா, பிரேசில், ஜொ்மனி, ஜப்பான் வலியுறுத்தின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com