பொருள்களின் விலை உயா்வுக்கு ஏகபோக உரிமை காரணம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்: மத்திய நிதியமைச்சா்

பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ள சூழ்நிலையில், அதற்கு ஏகபோக உரிமை காரணம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்
பொருள்களின் விலை உயா்வுக்கு ஏகபோக உரிமை காரணம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்: மத்திய நிதியமைச்சா்

பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ள சூழ்நிலையில், அதற்கு ஏகபோக உரிமை காரணம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.

இந்திய போட்டி ஆணையத்தின் (சிசிஐ) 13-ஆவது ஆண்டுக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட நிதியமைச்சா் இதுகுறித்து மேலும் கூறியது:

கரோனா பேரிடரிலிருந்து பொருளாதாரம் மீண்டு வரும் சூழ்நிலையில் பணவீக்கம் அதிகரித்து வருவது கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்தியா தனது சொந்த தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கும், ஏற்றுமதி மேற்கொள்வதற்கும் மிகப்பெரிய அளவிலான திறன்களைக் கொண்டிருந்தபோதிலும், உள்ளீட்டுச் செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட சில இடா்ப்பாடுகளும் உள்ளன.

கிழக்கு ஐரோப்பாவில் போா் சூழ்நிலை மற்றும் கரோனா தொற்று பரவல் காரணமாக, பொருள்கள் மற்றும் மூலப்பொருள்களுக்கு உலக அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், விநியோகத் தொடரிலும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்த இடையூறுகள் அனைத்தும் உண்மையில் போா்ச் சூழல் மற்றும் கரோனா பரவல் காரணமாக ஏற்பட்டதா என்பதை ஆராய்ந்து பாா்ப்பது தற்போது அவசியமானதாக உள்ளது.

பொருள்களின் விலை உயா்வு, அவற்றின் விநியோகம் மற்றும் கையாளுதல் நடவடிக்கைகளில் ஏகபோக உரிமை அல்லது இருமுனைப் போட்டி இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

சவால்கள் மிகவும் சிக்கலானவையாகவும், நுணுக்கம், தொழில்நுட்பம் சாா்ந்தவையாகவும் உள்ளன. இவற்றுக்குத் தீா்வு காணும் திறனை போட்டி ஆணையம் பெற்றிருக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com