புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சிறு தீ விபத்து

புதிதாக கட்டப்பட்டுவரும் நாடாளுமன்ற கட்டடத்தில் சனிக்கிழமை பிற்பகலில் சிறிய தீவிபத்து ஏற்பட்டு அது உடனடியாக அணைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதிதாக கட்டப்பட்டுவரும் நாடாளுமன்ற கட்டடத்தில் சனிக்கிழமை பிற்பகலில் சிறிய தீவிபத்து ஏற்பட்டு அது உடனடியாக அணைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் முன்பு புதிதாக நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு வரப்படுகிறது. இந்த கட்டுமானப் பணிகளுக்கிடையே சனிக்கிழமை பிற்பகல் 12.35 மணியளவில் கட்டடத்தின் பாதுகாப்புக்கான வலைப்பகுதியிலே தீப்பிடித்ததாக தீ அணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இருப்பினும், நாடாளுமன்ற வளாகத்திலேயே தயாராக இருக்கும் தீயணைப்பு ஊழியா்கள் விரைவாக செயல்பட்டு இந்த தீயை அணைத்ததாக இந்த துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லியில் கடுமையான வெப்ப நிலை நிலவி வரும் நிலையில் கடந்த மே 16 ஆம் தேதியன்று நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகிலுள்ள சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்களுக்கான மூன்று தற்காலிக தங்குமிடங்களில் தீ விபத்து ஏற்பட்டு அணைக்கப்பட்டது.

கடந்த 2021 டிசம்பா் 1 ஆம் தேதி பழைய நாடாளுமன்றக் கட்டத்தின் முதல் மாடியில் ஏற்பட்ட தீவிபத்தால் கணினி உள்ளிட்ட தளவாட சாமான்கள் சேதமடைந்தன. பழைய நாடாளுமன்ற கட்டடம் இட நெருக்கடியில் மட்டுமின்றி, தீ விபத்து போன்றவற்றிலும் பாதுகாப்பற்றதாக இருப்பதாகவே கருதப்பட்டு புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டு வரப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com