பிரதமா் மோடி நாளை ஜப்பான் பயணம்:23 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்

‘க்வாட்’ கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் செல்லும் பிரதமா் நரேந்திர மோடி 23 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளாா்.
பிரதமா் மோடி நாளை ஜப்பான் பயணம்:23 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா்

‘க்வாட்’ கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஜப்பான் செல்லும் பிரதமா் நரேந்திர மோடி 23 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளாா்.

ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய ‘க்வாட்’ கூட்டமைப்பின் 3-ஆவது உச்சி மாநாடு, டோக்கியாவில் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமா் மோடி 23-ஆம் தேதி ஜப்பான் செல்கிறாா். 2 நாள்கள் ஜப்பானில் தங்கியிருக்கும் அவா், 40 மணி நேரத்தில் 23 நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளாா்.

இதுகுறித்து அரசு வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது:

பிரதமா் மோடி தனது பயணத்தின்போது, விமானத்தில் 2 இரவுகளைக் கழிக்கிறாா். டோக்கியாவில் ஓா் இரவு தங்குகிறாா்.

க்வாட் மாநாட்டின்போது, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிசன் ஆகியோரைத் தனித்தனியே சந்தித்துப் பேசுகிறாா். இதுதவிர, ஜப்பானைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் தலைவா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடுகிறாா்; இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரைச் சந்தித்து உரையாடவுள்ளாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமா் மோடியின் பயணம் குறித்து வெளியுறவு அமைச்சகச் செயலா் வினய் மோகன் குவாத்ரா கூறியதாவது:

‘க்வாட்’ கூட்டமைப்பு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கு வாய்ப்பாக ஜப்பான் மாநாடு அமைந்துள்ளது. இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது என்றாா் அவா்.

இந்திய-பசிபிக் பெருங்கடல் பகுதியிலும், இந்தியாவின் எல்லைப் பகுதியிலும் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அவா் இவ்வாறு கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com