அசாமில் வெள்ளம்: இதுவரை 24 பேர் பலி, 7.19 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மேலும் 6 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 
அசாமில் வெள்ளம்: இதுவரை 24 பேர் பலி, 7.19 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மேலும் 6 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில நாள்களாக அசாம் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாநிலத்தின் 34 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் இதுவரை 7.19 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

பேரிடர் மீட்புப் படைகள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் பல்வேறு பகுதியில் சிக்கித் தவித்த 26,489 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 624 நிவாரண முகாம்களும், 729 நிவாரண விநியோக மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,32,717 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1,30,596.12 ஹெக்டேர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அசாம் அரசு கச்சார் மற்றும் டிமா ஹசாவ் மாவட்டங்களுக்கு தலா 2 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது. 

ஹோஜாய் மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச நிவாரணம் வழங்குவதற்காக 3 கோடி ரூபாய் கூடுதல் பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com