உத்தரப் பிரதேசத்தில் மே 26-ல் பட்ஜெட் தாக்கல்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் மே 26ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை தெரிவித்தார்.
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் மே 26ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை தெரிவித்தார்.

18 ஆவது உ.பி. சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை கூடியுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களிடம் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

“முதலாவது கூட்டத்தொடருக்கு அனைத்து உறுப்பினர்களையும் வரவேற்கிறேன். 2022 - 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மே 26ஆம் தேதி பேரவையில் தாக்கல் செய்யப்படும். உறுப்பினர்கள் எழுப்பும் பிரச்னையை விவாதிக்க அரசு தயாராக உள்ளது” எனத் தெரிவித்தார்.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில், பாஜக 255 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. சமாஜவாதி கட்சி 111 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், அந்த மாநில முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் கடந்த மார்ச் 25 ஆம் தேதி பதவியேற்றாா். அவருடன் கேசவ் பிரசாத் மெளரியா, பிரஜேஷ் பதக் ஆகிய இரு துணை முதல்வா்கள் உள்பட 52 அமைச்சா்கள் பதவியேற்றுக் கொண்டனா். அதைத் தொடர்ந்து மார்ச் 28 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் அனைவரும் பதவியேற்றுக்கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com