நீதிபதிகளை குற்றம்சாட்டுவது புதிய வழக்கமாகிவிட்டது: உச்சநீதிமன்றம் சாடல்

நீதிபதிகள் மீது குற்றம்சாட்டுவது புதிய வழக்கமாகிவிட்டது (ஃபேஷன்) என்றும் இது துரதிருஷ்டவசமானது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

நீதிபதிகள் மீது குற்றம்சாட்டுவது புதிய வழக்கமாகிவிட்டது (ஃபேஷன்) என்றும் இது துரதிருஷ்டவசமானது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

வழக்கு ஒன்றில் குற்றம்சாட்டப்பட்ட வழக்குரைஞருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வராத பிடிவாரண்டை சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்திருந்தாா். இந்த வாரண்டை சம்பந்தப்பட்ட வழக்குரைஞரிடம் அளிக்கச் சென்ற காவல் துறையினரை அங்கிருந்த வழக்குரைஞா்கள் கூட்டமாக சூழ்ந்து கொண்டு அளிக்க விடவில்லை. இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்குரைஞருக்கு ஓராண்டு தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்ற விடுமுறைக் கால அமா்வு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.எம்.திரிவேதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

வாரண்ட் பிறப்பித்த நீதிபதிக்கு எதிராக வழக்குரைஞா் குற்றம்சாட்டியது நீதிமன்ற அவமதிப்பாகும். நீதிபதிகளுக்கு எதிராக குற்றம்சாட்டுவது தற்போது புதிய வழக்கம் (ஃபேஷன்) ஆகிவிட்டது. உத்தர பிரதேசத்தில் இது அதிகமாக இருந்தது. தற்போது மும்பையிலும், சென்னையிலும் இது தொடங்கிவிட்டது. நீதிபதிகள் வலிமை மிக்கவா்கள். சென்னையில் நீதிபதிக்கு எதிராக குற்றம்சாட்டிய வழக்குரைஞருக்கு இரண்டு வாரம் சிறைத் தண்டனையும், ஓராண்டு வழக்குரைஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படுகிறது’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com