பிரதமர் மோடி 'பாரத் ட்ரோன் மஹோத்சவ்' நிகழ்ச்சியை நாளை தொடக்கி வைக்கிறார்

இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான 'பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022' நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை  பிரகதி மைதானத்தில் தொடக்கி வைக்கிறார்.
பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி

புது தில்லி: இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான 'பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022' நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை  தில்லியில் உள்ள  பிரகதி மைதானத்தில் தொடக்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி, திறந்தவெளி ட்ரோன் செயல் விளக்கங்களை காண்பார் மற்றும் வேளாண் ட்ரோன் இயக்குநர் மற்றும் ட்ரோன் கண்காட்சி மையத்தில் உள்ள தொழில்முனைவோருடன் கலந்துரையாடுவார்.

பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022 நிகழ்ச்சி 2 நாள் நடைபெறும். இந்த நிகழ்ச்சி மே 27 மற்றும் மே 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள், ஆயுதப்படைகள், மத்திய ஆயுதப்படை காவலர் படைகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ட்ரோன் தொழில்முனைவோர் அடங்கிய 1,600 பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

இக்கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் ட்ரோன்களின் பல்வேறு பயன்பாட்டு நிகழ்வுகளை காட்சிப்படுத்துவார்கள்.

ட்ரோன் இயக்குநர் சான்றிதழ்கள், தயாரிப்பு அறிமுகங்கள், குழு விவாதங்கள், பறக்கும் செயல் விளக்கங்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன் டாக்ஸி முன்மாதிரியின் காட்சி போன்றவற்றின் மெய்நிகர் விருது இந்நிகழ்வில் வழங்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com