ம.பி.யில் இரு குடும்பங்களுக்கிடையே மோதல்: 11 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள டடோடா கிராமத்தில் பணத் தகராறு காரணமாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் காயமடைந்தனர். 
ம.பி.யில் இரு குடும்பங்களுக்கிடையே மோதல்: 11 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள டடோடா கிராமத்தில் பணத் தகராறு காரணமாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் காயமடைந்தனர். 

வியாழன் இரவு நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மோவ் தெஹ்சில் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கிஷோர் சோஹன் மற்றும் அவரது உறவினர்கள், நரேந்திர முண்டேலுடன் ரூ.2,100-க்காக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

கிஷோரும் மற்றவர்களும் முண்டேலை கடுமையாகத் தாக்கி, பின்னர் அவர் மீதும் அவரது வீட்டின் மீதும் கற்களை வீசினர்.

இந்த சம்பவத்தில் அவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் சேதமடைந்தன என்று சிம்ரோல் காவல் நிலைய ஆய்வாளர் தர்மேந்திர ஷிவ்ஹரே தெரிவித்தார்.

கோபத்துடன் முண்டேல் சுமார் 90 பேர் கொண்ட கும்பலுடன், அவர்களில் பலர் வாள், தடி போன்ற ஆயுதங்களை வைத்திருந்தனர். பின்னர் தலித் மொஹல்லாவில் சோஹனின் குழுவைத் தாக்கினர். இதில் 14 இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர்.

தாக்குதலில், ஷங்கர்லால் சோஹன், அர்ஜுன் தேவ்தா, சுரேந்திர சோஹன், பிரஹலாத் மற்றும் 4 வயது ஹிமான்ஷி சோஹன் உள்பட 11 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

கிஷோர் சோஹனின் புகாரின் அடிப்படையில், நரேந்திர முண்டேல் மற்றும் 85 பேர் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிஷோர் சோஹன் மற்றும் 8 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போலீசார் பலரைச் சுற்றி வளைத்து, நிலைமை முழுமையாக கட்டுக்குள் வந்ததாகக் கிராமப்புற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சசிகாந்த் கன்கனே கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com